வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், டிசம்பர் 26, 2006

Airtel ன் சொதப்பல் ஆரம்பம்


Airtel நிறுவனம் நிமிடத்துக்கு 7.9 cents க்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொலைபேச ஒரு திட்டதை அறிவித்து அமெரிக்காவின் Calling Card சந்தையில் நுழைந்தது. இத்திட்டம் NRI மக்கள் மத்தியில் Airtel க்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அதற்கு இன்னொரு காரணம் Signup க்கும் முதல் recharge க்கும் இரட்டிப்பு மதிப்பு கொடுத்தது. அதாவது $50 வாங்கினால் அதன் மதிப்பு $100 ஆக Airtel நிறுவனத்தால் இரட்டிப்பு செய்யப்பட்டது. இந்த சலுகை குறிப்பிட்ட நாட்கள் வரைதான். சனவரி 7 க்குள் signup செய்ய வேண்டும். registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை, விபரங்களுக்கு https://www.airtelcallhome.com/ics/ என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

இதனால் நிமிடத்துக்கு 12.9 cents வாங்கிய Reliance ன் Calling Card சரியாக அடி வாங்க வேண்டியது Airtel ன் மா மாபெரும் தவறால் தப்பிவிட்டது. வாடிக்கையாளர் சேவை என்பது இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம், இல்லாமலே பெரிய அளவில் வளராலாம். ஆனால் அமெரிக்காவில் இது நடப்பது கடினம் என்பது Airtel க்கு புரியவில்லையே என்ன செய்வது??

இது நாள் வரை Airtel ன் வாடிக்கையாளர் சேவையை போல் ஒரு மகா மோசமான சேவையை நான் அமெரிக்காவில் பார்த்ததில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் வாடிக்கையாளர் சேவையே கிடையாது. எப்போது வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்தாலும் அது 'busy' ஆகவே இருக்கும். அவர்களின் வலைதளமும் மோசம், ஏதாவது update செய்யனும் என்றால் 5 நிமிடம் கழித்து Error வந்து நிற்கும். ஆரம்பத்திலேயே இந்த மாதிரி என்றால் ????

Airtel ன் அதிரடி நுழைவால் ஆடிப்போன Reliance சுதாகரித்துக் கொண்டு விலையை குறைத்துவிட்டது. இப்போ நிமிடத்துக்கு 7.9 cents தான். அதுவுமில்லாமல் recharge/new registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை விபரங்களுக்கு relianceindiacall.com என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

Airtel வருகையால் என்னைப்போன்றவர்களுக்கு நன்மை.

குறிப்பு : இந்த 2 நிறுவனங்களின் calling card தவிர மேலும் பல நிறுவனங்கள் 7.9 cents க்கு calling card கொடுக்கின்றன. ஆனால் reliance நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
https://www.reliablecalling.com/ நிமிடத்துக்கு 6.9 cents, www.pingo.com நிமிடத்துக்கு 7.6 cents

வாழ்க போட்டி! வளர்க வாடிக்கையாளர் நலன் !!.

14 கருத்துகள்:

Santhosh சொன்னது…

Airtel சேவை துவங்கி ஒன்று அல்லது இரண்டு வாரமே ஆகிறது சரி ஆக சிறிது நாட்கள் ஆகும். மேலும் நம்மளுக்கு எல்லாம் customer care service ஒரு பொருட்டே அல்ல விலை அடிமாட்டு விலையாக இருக்கும் வரையில் :)).. இது வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்து கொள்ளை அடித்துக்கொண்டு இருந்த reliance இன் விலை குறைப்பு ஒன்றே போதும் ஏர்டெலின் சாதனை என்று சொல்ல :))..

பெயரில்லா சொன்னது…

AIRTEL Calling is a lazzzzzzzzzy company for market. Without any preprations Airtell came to market and given everyone (as of I know we 7 guys asked them to return money now, 3 of them got money back) a bad taste....

பெயரில்லா சொன்னது…

மகா மட்டமான சேவை.

please do not use that

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல வேளை நாங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. ரிலையன்ஸ் 7.9 சென்ட்டுக்கு கொடுத்தாலும் முதல் இரண்டு ரீசார்ஜில் இரட்டிப்பு என்பதில் ஒரு அளவை வைத்திருக்கிறார்கள். முன்பு ஒரே ரீஜார்ஜில் 25 $க்கு வாங்கலாம். இப்போது இரண்டே வகை தான். 5$ அல்லது 10$, நேற்றே நான் இரண்டு $10 வாங்கி $40க்கான ரீஜார்ஜ் செய்து கொண்டேன்.

Machi சொன்னது…

/மேலும் நம்மளுக்கு எல்லாம் customer care service ஒரு பொருட்டே அல்ல விலை அடிமாட்டு விலையாக இருக்கும் வரையில் :)).. /

உண்மை தான் சந்தோஷ் :-))

ஆனா Airtel போன்ற தொலைதொடர்பு துறையில் முதன்மையான நிறுவனங்கள் இந்த மாதிரி சரியான முன்னேற்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாடிக்கையாளரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது சரியான முறை அன்று. இப்ப பாருங்க Reliance சுதாகரித்துக்கொண்டது. :-) Airtel நிறைய வாடிக்கையாளர்களை பிடிக்க இனி ரொம்ப கஷ்டப்பட வேண்டும்.

/ஏர்டெலின் சாதனை என்று சொல்ல :))/
இதனால் Airtel க்கு ஒரு நன்மையும் இல்லை, நன்மை நமக்குதான். :-))

Machi சொன்னது…

Anony, you guys are lucky, lot of people are not able to talk to customer service. Still there are trying to get them :-((

Machi சொன்னது…

/முன்பு ஒரே ரீஜார்ஜில் 25 $க்கு வாங்கலாம். இப்போது இரண்டே வகை தான். 5$ அல்லது 10$, நேற்றே நான் இரண்டு $10 வாங்கி $40க்கான ரீஜார்ஜ் செய்து கொண்டேன்/

குமரன், என்னமோ தவறு நடந்திருக்கு. $5, $10, $25, $50, $100, $200 க்கு பண்ணலாம். என் நண்பர் $100 க்கு பண்ணியிருக்கார். நான் இன்னும் பண்ணவில்லை ஆனால் கூடிய விரைவில் பண்ணப்போறேன்.

பெயரில்லா சொன்னது…

தக்க சமயத்தில் வந்த தகவலுக்கு நன்றி!

PKS சொன்னது…

I have been using RelianceIndiaCall for many years without any problem. Only during this Diwali after 11 AM EST, we could not make calls due to call overloads. I made calls until 10:45 AM EST on that day though. Apart from that never had a problem.

Tried reliable. The big problem is it did not give 800 numbers then. Gave local access numbers like calling cards in the market. During peak times (weekends), the call will get connected, u will hear only noice or static. Did not like it the quality of calls. Sometimes u will get busy signals too.

Tried to register with Airtel. Even after giving my address as correct, it kept on telling me to give valid addressline 1 :-)). Tried calling the customerservice number of airtel for 1 hour continuously at 5 min intervals. Got only busy sign.

I tried various calling cards in 10 years in USA. RelianceIndiaCall is the best so far.

- PK Sivakumar

Machi சொன்னது…

அனானி உங்களுக்கு சரியான நேரத்தில் இச்செய்தி பயன்பட்டதற்கு மகிழ்ச்சி.

Machi சொன்னது…

yes PKS i agree that reliance call is good, but until airtel promo they didn't reduce the price now they droped 5 cents per minute.
In that way airtel helped us :-) .
but i can say Airtel call clarity is good, but no customer service at all, this will affect them in long run, for big corporation it is not a good sign.

In the begining reliance charged 11.9 cents then they increased it to 12.9 cents :-( but now they come down to 7.9 cents :-)) .

I didn't try reliable call but one of my friend told pingo is good.

Machi சொன்னது…

குமரன் இப்போதான் நான் Reliance Card ஐ recharge பண்ணினேன், நல்லா ஏமாத்தறாங்கப்பா. $5 க்கு தான் இரட்டிப்பு. $10 & $25 க்கு 60 நிமிடம், $50 க்கு 120 நிமிடம், $100 க்கு 180 நிமிடம், $200 க்கு 240 நிமிடம் அதிகம்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

நான் vdtelecom என்ற நிறுவனத்தின் சேவையைப் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன் படுத்துகிறேன். அலுவலக அழைப்புகளுக்கு ரிலையன்ஸ்தான். விடிடெலிகாம் நிறுவனத்தினரும் இந்த இரட்டிப்பு சலுகை தந்தார்கள். சில சமயங்கள் தவிர நன்றாகவே வேலை செய்கிறது.

Machi சொன்னது…

இகொ, இப்பதாங்க vdtelecom பத்தி கேள்விப்படறேன்.