வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, மார்ச் 02, 2007

சனிக்கிழமை முழு சந்திர கிரகணம்.

3 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சனிக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அப்போழுது வெண்ணிலா செந்நிலாவாக காட்சியளிக்கும். இதை அனைவரும் எந்தவித சிறப்பு கருவிகளும் இன்றி வெறும் கண்ணாலயே பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது, அதனால் கவலையில்லாமல் வெறும் கண்ணால் பார்க்கலாம். பைனாகுலர் மூலம் பார்த்தால் இன்னும் சிறப்பாக காட்சி தெரியும்.

கிரகணம் தொடங்கும் நேரம் - 2018 GMT
முழு கிரகணம் தெரியும் நேரம் - 2244 TO 2358 GMT.



மேலுள்ளது எவ்வாறு கிரகணம் உருவாகிறது என்பதை காட்டும் படம்..


ஐரோப்பா , மத்திய கிழக்கு & ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு முழுதாக இது தெரியும். இந்தியா & அமெரிக்க, கனடா கிழக்கு கரை மக்களுக்கு முழுதாக இல்லாவிட்டாலும் பெரும்பகுதி தெரியும். நியுசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதி மக்களுக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது.


மேலுள்ளது எங்கு கிரகணம் தெரியும் என்பதை காட்டும் படம்.









4 கருத்துகள்:

செல்லி சொன்னது…

//நியுசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதி மக்களுக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது. //

அப்போ, நாங்க பாக்க முடியாது!
தகவலுக்கு நன்றி

துளசி கோபால் சொன்னது…

எங்களுக்கும் GMTக்கும் 12 மணி நேர வித்தியாசம் இருக்கு. நீங்க
சொல்ற நேரம் எங்களுக்கு காலை 8.18 காலை. ( இப்ப டே லைட் சேவிங்
வேற இருக்கு. அதனால் இது 9.18) முழு கிரகணம் 11.58க்கு பட்டப்பகல்.
அப்ப எங்கே தெரியப்போகுது? (-: ஹூம்.........

நேத்து இங்கே பவுர்ணமி நிலாவைப் பார்த்து ரசிச்சாச்சு:-)))))

விவரமான பதிவுக்கு நன்றிங்க.

உங்க பூனையார் பார்த்தாரா?

துளசி ( நியூஸி)

Machi சொன்னது…

//அப்போ, நாங்க பாக்க முடியாது!//
ஆமாங்க செல்லி .

Machi சொன்னது…

//உங்க பூனையார் பார்த்தாரா?

துளசி ( நியூஸி) //

பூனையார் கொஞ்சம் கண் அசந்துட்டார் :-))