வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், டிசம்பர் 30, 2009

ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்

இது பரபரபுக்காக வைக்கப்பட்ட தலைப்பா என்றால் ஆம் இல்லை எனலாம். நடந்த செயல் உண்மை. இவ்விடுகைக்கு வேறு மாதிரி தலைப்பு கொடுக்கத்தான் நினைத்திருந்தேன் ஆனா பதிவுலகில் இப்போ ஈரோடு பேச்சு அதிகமா இருப்பதால் இத்தலைப்பு. இஃகி இஃகிஃ

நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.

இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.

இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.

1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.

தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.

அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.

எனக்கு புரியாதது
:-

1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.

2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.

3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.

.

11 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

அரசுப்பேருந்திலும் சரி... தனியார் பேருந்திலும் சரி.. இந்த 50பைசா கொள்ளை நடந்துகிட்டேதான் இருக்கு தலைவரே...

//அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா?//

தப்புதான். பண்டிட்ஜிக்கு தெரியமாட்டுதே??

பெயரில்லா சொன்னது…

என்னங்க அநியாயமா இருக்கு....

50 பைசாவ 'கொள்ளையடிக்க' விட்டுட்டீங்களே.....

குறும்பன் சொன்னது…

பாலாசி நீங்க சொல்வது உண்மை தான். ஆனால் அதிகாரபூர்வமா டிக்கட் விலையை 50 காசு அதிகமாக வாங்குவது எந்த வகையில் சேர்த்தி என்று புரியவில்லை.

பண்டிட்ஜி வண்ணமயமான பேருந்து விட்டே நம்மள ஓட்டாண்டி ஆக்கிடுவாறு. அவருக்கா தெரியாது?

குறும்பன் சொன்னது…

பெயரில்லா எனக்கு 50 காசு பெரிசில்லை தான். நீங்க 50 காசு கம்மியா கொடுத்து பேருந்தில் பயணம் செய்யுங்களேன். அப்ப தெரியும் 50 காசு கொள்ளையை பத்தி :)

இது அதிகாரபூர்வமான கொள்ளை.

சுடுதண்ணி சொன்னது…

//இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?//

நியாயம், அநியாயமெல்லாம் பிரித்துப் பார்க்கும் சக்தியை இழந்து விட்டது இந்திய ஜனம்/ஜனநாயகம்.

குறும்பன் சொன்னது…

வாங்க சுடுதண்ணி. நம்ம சனம் என்றைக்கு விழிக்குமோ தெரியலையே.

ரோஸ்விக் சொன்னது…

அரசுக்கு அதிகமாக வசூல் ஆகும் தான். லாபம் எங்கே என்று கேட்டால், நிர்வாகச் செலவுகள் அதிகம் என்பர். இவர்கள் நிர்வகிக்கும் லட்சனத்திற்கு அதிகமான செலவு வேறு.
அங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர், கடனுக்கு வேலை பார்ப்பார்கள். உருப்படியாக வேலை செய்பவர்கள் மிகக் குறைந்து வருகின்றனர். இருக்கும் அனைத்து வகைகளிலும் சுரண்ட பார்ப்பார்கள்.

இது மாதிரி பல காரணம் இருக்கு தலைவா. ரொம்ப பேசவைக்காதீங்க... அப்புறம் நம்மளும் இறையாண்மைக்கு எதிரா இருக்கிறதா சொல்லிடுவாய்ங்க. :-)))

பழமைபேசி சொன்னது…

வணக்கமுங்க! இஃகி!!

குறும்பன் சொன்னது…

பொறுக்கமுடியாம தான் இந்த இடுகை ரோஸ்விக். பேச பேச கோபம் தான் வருது என்ன செய்ய?

இந்தியா வாழ்க. :-))

குறும்பன் சொன்னது…

காவேரி கணேசு உங்கள் இடுகையை பார்த்தேன். படங்கள் அருமை.

குறும்பன் சொன்னது…

வாங்க பழமை. இடுகை இடுவது குறைஞ்சு போனாலும் இடுகைகளை படிக்க தவறுவதில்லையாட்டக்கது இஃகிஃகி.

நல்லா நிறைய ஊரை சுத்தி பாருங்க. அப்ப தான் எங்களுக்கு நிறைய இடுகைகள் கிடைக்கும்.